விதிகள்

 • இது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமான போட்டியாகும்.
 • உங்கள் அணியை உருவாக்குவதற்கு, 1,200 புள்ளிகள் பட்ஜெட்டாகக் கொடுக்கப்படும்.
 • ஒவ்வொரு அணியிலும் 11 வீரர்கள் இருக்க வேண்டும்.
 • ஒவ்வொரு வீரருக்கும் விலையுண்டு, உங்கள் அணியில் உள்ள வீரர்களின் ஒட்டுமொத்த மதிப்பானது 1,200 புள்ளிகள் எனும் பட்ஜெட்டைவிட அதிகமாக இருக்கக்கூடாது.
 • நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது:
  4-5 பேட்ஸ்மேன்2-4 பவுலர்கள்2-4 ஆல்ரவுண்டர்கள்1 விக்கெட் கீப்பர்
 • நாக் அவுட் போட்டிகள் உட்பட, போட்டித்தொடர் முழுவதும் 30 மாற்றுவீரர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 • முதன்முதலாக அணியை உருவாக்கும் போது, மாற்றுவீரர்களின் எண்ணிக்கைக் குறைக்கப்படாது. முதல் அணியைச் சேமித்த பிறகு மாற்றங்கள் செய்தால், மாற்றுவீரர்களின் எண்ணிக்கைக் குறையும்.
 • போட்டி தொடங்குவதற்கு 1 நிமிடத்திற்கு முன்பாகவே அன்றைய நாளின் மாற்றுவீரர்கள் அனைவரையும் தேர்வுசெய்திருக்க வேண்டும்.
 • போட்டியின்போது உங்கள் அணியில் மாற்றம் செய்ய முடியாது. போட்டியின்போது செய்த மாற்றங்கள், போட்டி முடிந்தபிறகு மட்டுமே செயல்படுத்தப்படும்.
 • 11 வீரர்கள் உள்ள ஒவ்வொரு அணியிலும் ஒரு கேப்டன் இருக்க வேண்டும்.
 • போட்டியில், கேப்டன் இரட்டிப்புப் புள்ளியைப் பெறுவார் (முடிவுகளைப் பொறுத்து, நேர்மறையான அல்லது எதிர்மறையான புள்ளிகள்).
 • உங்கள் அணியில் வீரர் இருக்கும் வரை, ஒவ்வொரு போட்டியின் தொடக்கத்திலும் கேப்டனை மாற்றிக்கொள்ளலாம். கேப்டனை மாற்றுவதால் மாற்றுவீரரின் எண்ணிக்கைக் குறையாது.
 • ஒவ்வொரு நாளும் சிறப்பாகச் செயல்படும் 3 அணிகளுக்குத் தினசரி விருதுகள் வழங்கப்படும். போட்டித்தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்படும் 3 அணிகளுக்கு ஓவர் ஆல் விருதுகள் வழங்கப்படும்.
 • டையில் முடியும் போட்டிகளில் டை-பிரேக்கர் முறையானது பின்வரும் வரிசையில் பயன்படுத்தப்படும்:
  • குறைந்தபட்ச பட்ஜெட்டைப் பயன்படுத்திய அணி
  • குறைந்தபட்ச எண்ணிக்கையில் மாற்றுவீரர்களைப் பயன்படுத்திய அணி
  • முதலில் உருவாக்கப்பட்ட அணி (அணி சேமிக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில்)
  • இன்னும் டையில் இருந்தால், வெற்றிபெறும் ரேண்டம் பிக்கர் முறையில் தேர்வுசெய்யப்படும்.